உள்ளடக்கத்துக்குச் செல்

வேர்ச் சொல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
BalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:19, 30 மே 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வேர்ச் சொல் என்பது ஒரு சொல்லில் அடிப்படையாக அமைந்துள்ள அதன் பகுதியாகும். ஒரு மொழியில் ஒலியன் அடிப்படையில் தொடர்புள்ளனவும், பொருட் தொடர்புகளைக் கொண்டனவுமான பல சொற்கள் காணப்படுகின்றன. இவை அனைத்துக்கும் பொதுமையாக அமைந்திருப்பனவே வேர்ச் சொற்கள் ஆகும்.

எடுத்துக் காட்டாக வளை, வளையம், வளையல், வடை, வட்டம், வட்டு, வட்டில், வடம் போன்ற சொற்கள் அனைத்துக்கும் அடிப்படையாக அமைந்திருப்பது வள் என்பதாகும். எனவே இச் சொற்களின் வேர்ச்சொல் வள் ஆகும்.

வேர்ச் சொற்களுடன் ஒட்டுக்கள் சேரும்போது பல்வேறு சொற்கள் உருவாகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேர்ச்_சொல்&oldid=2740829" இலிருந்து மீள்விக்கப்பட்டது