உள்ளடக்கத்துக்குச் செல்

சபாரி உலாவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Addbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:17, 23 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சபாரி
மேம்பாட்டாளர்ஆப்பிள் நிறுவனம்
தொடக்க வெளியீடுசனவரி 7 2003 (2003-01-07), 7838 நாட்களுக்கு முன்னதாக
இயக்க அமைப்புமாக் ஓ.எசு, வின்டோஸ் எக்ஸ்பி
விஸ்டா, மற்றும் 7
வளர்ச்சி நிலைசெயலில்
வகைஉலாவி
வலைத்தளம்apple.com/safari

சபாரி உலாவி ஆப்பிள் நிறுவனத்தின் வணிக உரிமம் பெற்ற ஒரு உயர்ந்த உலாவி ஆகும். சபாரி உலாவியின் ஐந்தாவது பதிப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது மாக் இயங்கு தளத்துடன் இணைந்து வரும் ஒரு மென்பொருள். சபாரி உலாவி முதன் முதலில் ஜனவரி 7 , 2003ல் வெளியிட்டு , பின்னர் மாக் 10.3 பந்தர் பதிப்புடன் கோட நிலை (default) உலாவியாக மாறியது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தில் இயங்ககூடிய சபாரி உலாவியும் 2007 ஜூன் மாதம் வெளியிட்டது. இணையத்தளத்தில் மிகவும் பிரபலமான உலாவியில் சபாரி நான்காம் இடத்தில உள்ளது.

வரலாறு

1997 வரையில் ஆப்பிள் நிறுவனம் மசிண்டோஷ் கணினிகளில் நெட்ஸ்கேப் நாவிகடோர் மற்றும் சைபர்டாக் என்ற உலாவிகளை மட்டுமே உள்ளடிகியதாக வியாபாரம் செய்தது. பின்னர் மைக்ரோசாப்ட் ஆப்பிள் நிறுவனத்திற்கு இடையில் இருந்த ஒப்புதல் மூலம் இன்டர்நெட் எக்ஸ்ப்லோரேர் மாக் இயங்குதளத்தில் கோடநிலை உலாவியாக சுமார் ஐந்து வருடத்திற்கு இருந்தது. இருந்தாலும் ஆப்பிள் நிறுவனம் நெட்ஸ்கேப் நாவிகடோர் உலாவியை பதிலீடாக வைத்திருந்தது, பின்னர் அதுவே கோடநிலை உலாவியாக மாறியது.

சபாரி 1

ஜனவரி 2003ல், சான் பிரான்சிஸ்கோ நகரில் நடந்த மாக் வேர்ல்ட் என்ற ஆண்டு மாட்நாட்டில் ஸ்டீவ் ஜொப்ஸ், அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி, ஆப்பிள் நிறுவனம் சுயமாக தயாரித்த சபாரி உலவியை அறிமுகப்படுத்தினார். சபாரி உலாவி மாக் 10.3 பதிப்பில் கோடநிலை உலாவியாக மாற்றப்பட்டது, அதே சமயம் இண்டர்நெட் எக்சுபுளோரர் பதிலீடு உலாவியாக சேர்த்துகொண்டது .

"https://ta.wikipedia.org/w/index.php?title=சபாரி_உலாவி&oldid=1387720" இலிருந்து மீள்விக்கப்பட்டது